பிருத்விராஜ் படத்துக்கு உக்ரைன் அளித்த கெளரவம்..!
23 பிப்,2017 - 16:17 IST
சமீபத்தில் மலையாளத்தில், பிருத்விராஜ், பிரியா ஆனந்த் நடிப்பில் 'எஸ்றா' என்கிற படம் வெளியானது. ஜெய்.கே என்கிற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஹாரர் படங்களில் இது ஒரு புதுவிதமாக இருந்ததால், திரையிட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.. இதனால் பல தியேட்டர்களில் ரிலீஸ் அன்று இரண்டாம் காட்சி என்பதை தாண்டி நடுநிசி காட்சியையும் திரையிடவேண்டிய சூழல் ஏற்பட்டது.. தவிர முதல்நாள் கலெக்சனாக 2.65 கோடி ரூபாய் வசூலித்து பிருத்விராஜ் படங்களிலேயே அதிக முதல் நாள் வசூல் என்கிற பெருமையையும் இது பெற்றுள்ளது..
இந்த ஒரு வாரத்தில் சுமார் இருபது கோடி வரை வசூலித்துவிட்ட (கேரளாவை பொறுத்தவரை இது பெரிய வசூல் பாஸ்) இந்தப்படம் இன்னொரு புதிய சாதனையையும் செய்துள்ளது.. அதாவது இதுநாள் வரை மலையாள திரைப்படங்களே எட்டிப்பார்க்காத உக்ரைன் நாட்டில் இந்தப்படம் முதல் மலையாளப்படமாக ரிலீசாக இருக்கிறது.. உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் என்கிற நகரில் கினோ என்கிற மல்டிபிளக்ஸ் தியேட்டரில் வரும் பிப்-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
0 comments:
Post a Comment