என்னையும் "அட்ஜெஸ்ட்" பண்ணிக்க சொன்னார்கள்: ரெஜினா பகீர் தகவல்
25 பிப்,2017 - 10:06 IST
பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம் மாநகரம், சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, மூனீஷ்காந்த் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்தப்படத்தின் புரமோசனுக்காக வந்திருந்த ரெஜினா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பாவனா விவகாரம் குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
சுற்றி இருப்பவர்களை நம்பித்தான் நாம் வேலை செய்கிறோம். அவர்களே குற்றவாளியாக மாறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது பெரிய விவகாரம், இது குறித்து பேசும் அளவிற்கு எனக்கு முதிர்ச்சி இல்லை. என்றாலும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை தூக்கில் போட்டாலும் தப்பில்லை. அவர்களுக்கு கொடுக்கிற தண்டனையை பார்த்து இன்னொருவருக்கு அந்த தவறை செய்ய துணிவு வரக்கூடாது.
இது ஒருபுறம் இருந்தாலும் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். சினிமா நடிகைகள் மட்டுமல்ல ஆண்களுடன் இணைந்து பணியாற்றும் சூழல் உள்ள அனைவரும் தங்களை எந்த சிக்கலில் இருந்தும் பாதுகாகத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இன்றைய காலச் சூழ்நிலையில் இது முக்கிய தேவையாக இருக்கிறது.
நான் அறிமுமானது தமிழ் படத்தில்தான். அப்போது நான் பெரிய நடிகை இல்லை. போனிலேயே நடிக்க கூப்பிடுவார்கள். அப்படி போனில் அழைத்த ஒருவர் எல்லாம் பேசி முடித்த பிறகு தயங்கியபடி "அட்ஜெஸ்மெண்ட் பண்ணிக்குவீங்களா" என்று கேட்டார். அப்போது எனக்கு அதன் பொருள் தெரியாது. பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எனக்கு அப்படிப்பட்ட அழைப்புகள் வரவில்லை. ஒருவரிடம் கதை கேட்பதாக இருந்தால்கூட அவரது பின்னணியை தெரிந்து கொண்டுதான் கேட்பேன். நாம் கவனத்துடன் இருந்தால் யாருடைய உதவியும் தேவையில்லை. கவனமாக இருப்பதுதான் நம்மை பாதுகாகத்துக் கொள்ளும் முதல் ஆயுதம்.
மேலும் பாவனா விஷயத்தை மீடியாக்கள் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டார் ரெஜினா.
0 comments:
Post a Comment