நயன்தாரா பாணியில் அகல்யாவாக நடிக்கிறார் சோனியா அகர்வால்
24 பிப்,2017 - 10:54 IST
சிறிய பட்ஜெட் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த சோனியாக அகர்வால் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் திகில் படத்தில் ஹீரேயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நயன்தாரா நடித்துள்ள மாயா, தற்போது நடித்து வரும் டோரா படங்களின் சாயலில் இந்தப் படம் உருவாக உள்ளது. இதனை பிரபல மலையாள விளம்பர பட இயக்குனர் ஷிஜின்லால் இயக்குகிறார். சுரேஷ் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார்.
அகல்யா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சோனியாக அகர்வால் அகல்யாவாக நடிக்கிறார். சோனியா தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஹீரோ இல்லை. சிபின் ஷா என்பவர் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார்.
"இந்தப் படம் ஹீரோயின் ஓரியண்டட் ஹாரர் மூவி. சோனியா அகர்வால்தான் படத்தின் ஆல் இன் ஆல் கேரக்டர். ஒரு முக்கிய நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஏற்பாடு நடக்கிறது. முதலில் தமிழ், மலையாளத்தில் தயாரிக்கிறோம். அதை மற்ற மொழிகளிலும் டப் செய்து ஒரே நேரத்தில் வெளியிடுகிறோம். வசனங்கள் மிகவும் குறைவு எல்லாமே காட்சி வழிதான். ஹாலிவுட் வி.எப்.எக்ஸ் கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்" என்கிறார் இயக்குனர் ஷிஜின்லால்.
0 comments:
Post a Comment