கடந்த சில தினங்களாக பின்னணி பாடகி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய டுவிட்டுகளை பதிவு செய்து வந்தார். அதில், அவர் தனுஷின் ஆட்களால் தான் காயம்பட்டதாகவும், தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டதாகவும் ஏகப்பட்ட டுவிட்டுகளை பதிவு செய்து வந்தார்.
அவரது டுவிட்டர் கணக்கு யாராலும் முடக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் ஒருபக்கம் எழுந்தது. ஆனால், சுசித்ரா அதுவும் இல்லை என்பதுபோல் மேலும் மேலும் டுவிட்டுகளை பதிவு செய்துகொண்டே இருந்தார். இதுகுறித்து சுசித்ராவிடம் விளக்கம் கேட்க அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நடிகரும், சுசித்ராவின் கணவருமான கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கடந்த சில தினங்களாக சுசித்ரா பதிவு செய்ததாக சில டுவிட்டுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.
இது அனைத்தும் சுசித்ரா பதிவு செய்தது அல்ல. அவரது டுவிட்டர் கணக்கு சிலபேரால் முடக்கப்பட்டது. தற்போது அவருடைய டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டோம். சுசித்ரா பதிவு செய்த டுவிட்டுகள் சிலபேருக்கு மனவலியை கொடுத்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment