‛பண்டிகை' - பிப்., 26-ல் பாடல், மார்ச் 9-ல் படம் ரிலீஸ்
21 பிப்,2017 - 17:49 IST
நிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம் பண்டிகை. இதில் கிருஷ்ணா - ஆனந்தி முதன்மை ரோலில் நடித்துள்ளார்கள். டி டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி தயாரிக்க, பெரோஸ் இயக்க, ஆர்எச்.விக்ரம் இசையமைக்க, அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பண்டிகை படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற பிப்ரவரி 26-ம் தேதி, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தொடர்ந்து மார்ச் 9-ம் தேதி படம் ரிலீஸாகிறது, ஆரா சினிமாஸ் பண்டிகை படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
Advertisement
0 comments:
Post a Comment