டாப்ஸியின் இந்தி ஷபானா தமிழில் வெளிவருகிறது
27 பிப்,2017 - 14:20 IST
ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்ஸி இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் விஜயசாந்தி ரேன்ஞ்சுக்கு ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் நாம் ஷபானா. அக்ஷய்குமார், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கேர், டேனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆனால் படம் முழுக்க ஆக்கிரமித்திருப்பது டாப்ஸி தான்.
துப்பாக்கியால் எதிரிகளை போட்டுத் தள்ளுவது, கட்டிடத்திற்கு கட்டிடம் தாவி குவிப்பது, அந்தரத்தில் தொங்கியபடி பறந்து பறந்து அடிப்பது என லேடி ஜேம்ஸ்பாண்டாக ஆக்ஷ்னில் கலக்கி உள்ளார். சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ள டாப்ஸியின் வில்லன் பிருத்விராஜ். ஹாலிவுட்டில் வெளிவந்த சால்ட் படம் போன்று சிங்கிள் உமன் ஆக்ஷ்ன் படம். ஷிவம் நாயர் இயக்கி உள்ளார். ராக்கி கோலி, கோமெயில், மீட் புரோஸ் இசை அமைத்துள்ளனர். சுதீர் பல்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டாப்ஸி தமிழுக்கு அறிமுகமானவர் என்பதால் நாம் ஷபானாவை நான் ஷபானா என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். வருகிற மார்ச் 31ந் தேதி வெளிவருகிறது.
0 comments:
Post a Comment