'காப்பி' சர்ச்சையில் 'பாகுபலி 2' புதிய போஸ்டர்
27 பிப்,2017 - 14:27 IST
திரையுலகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக செய்வதாக நினைத்துக் கொண்டு சிலர் செய்யும் விஷயங்கள், கடைசியில் 'காப்பி' என்ற சர்ச்சையில் போய் முடிந்துவிடுகிறது. தமிழ்த் திரையுலகத்தில்தான் இப்படி அதிகமான 'காப்பி' சர்ச்சைகள் எழுந்துள்ளது. படத்தின் போஸ்டர் டிசைன்களில் கூட காப்பியடிக்கும் கௌதம் மேனன்கள் இங்கு இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக பல போஸ்டர்களைச் சொல்லலாம்.
இப்போது 'பாகுபலி 2' படத்தின் புதிய போஸ்டரும் காப்பி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. மகா சிவராத்திரியன்று 'பாகுபலி 2' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். யானையின் தும்பிக்கை மீது ஏறி நிற்கும் பிரபாஸின் அந்த போஸ்டருக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த போஸ்டர் டோனி ஜா நடித்து 2008ம் ஆண்டு வெளிவந்த தாய்லாந்து படமான 'ஓங் பாக் 2' படத்தின் போஸ்டரில் இருந்து காப்பியடித்துள்ளார்கள் என தகவல் பரவியது. அந்தப் படமும் ஒரு வரலாற்றுப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் போஸ்டர்களை கூகுளில் தேடினால் கூட யானை மீது டோனி ஜா செய்யும் சண்டை வீர சாகசங்கள் அடங்கிய போஸ்டர்கள்தான் கிடைக்கிறது.
'பாகுபலி 2' புதிய போஸ்டரில் எதிரில் நிற்கும் எதிரியைக் காட்டாமல் பிரபாஸை மட்டும் காட்டியிருக்கிறார்கள். இந்த சர்ச்சைக்கு ராஜமௌலி பதிலளிப்பாரா என்பது சந்தேகம்தான்.
0 comments:
Post a Comment