ஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழக முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சினை என எதையும் விடாமல் கமல் தன் கருத்துக்களை கூறி வருகிறார்.
தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற மீத்தேன் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இதற்கு கமல் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment