நானி நடிக்கும் “நின்னு கோரி” பஸ்ட் லுக் வெளியீடு
25 பிப்,2017 - 10:11 IST
நேனு லோக்கல் படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். மலையாள நடிகை நிவேதா தாமஸ் நானிக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கின்றார். கோன வெங்கட் திரைக்கதை அமைக்கும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கின்றார். நானியின் பிறந்த நாளான இன்று(பிப் 24) நானி நடிக்கும் புதிய படத்தின் பஸ்ட் லுக் நின்னு கோரி எனும் தலைப்புடன் வெளிவந்தது. இப்பட பஸ்ட் லுக் போஸ்டரை நானி தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இப்படத்தின் பெரும்பாலுமான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகின்றதாம். தனிகேலா ப்ரனி, முரளி சர்மா, ப்ருத்வி, பூபல் ராஜு, நீட்டா, ராஜ்யஸ்ரீ நாயர் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஜூன் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் நானி நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த நேனு லோக்கல் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது
0 comments:
Post a Comment