Saturday, February 25, 2017

இயக்குனர் ஆன இசை அமைப்பாளர்


இயக்குனர் ஆன இசை அமைப்பாளர்



25 பிப்,2017 - 13:46 IST






எழுத்தின் அளவு:








தற்போது இசை அமைப்பாளர்கள் எல்லாம் நடிகர் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இசை அமைப்பாளர் பரணி இயக்குனர் ஆகியிருக்கிறார். பெரியண்ணா படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான பரணி பார்வை ஒன்றே போதுமே சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட 40 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். சில காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்தவர் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஒண்டிக்கட்ட என்பது படத்தில் டைட்டில். பிரண்ட்ஸ் சினி மீடியா தயாரிக்கிறது. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விக்ரம் ஜெகதீஷ் இதில் ஹீரோவாகியிருக்கிறார். உச்சத்துல சிவா, இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் நடித்த நேகா ஹீரோயின். இவர்கள் தவிர கலைராணி, சாமிநாதன், செண்ட்ராயன், மதுமிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். பரணியே இசை அமைக்கிறார். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி பரணி கூறியதாவது:

"பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் பாடல்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. ஒரு நல்ல கதை அமைந்ததால் ஒண்டிக்கட்ட படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதை மூலம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சூழல் அப்படியொரு நிலையை ஏற்படுத்தி விடுகிறது. அதைதான் கதையாக்கி இருக்கிறோம்.

தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் இந்த மூன்று கதாப்பாத்திரங்களும் கதையின் உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி - செந்தில் மாதிரி தோன்றுவார்கள். காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சை, பாபநாசம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது" என்றார் பரணி. .


0 comments:

Post a Comment