இப்படியும் படப் பெயர்கள் ?
25 பிப்,2017 - 17:19 IST
தமிழ் சினிமாவில் தலைப்புப் பஞ்சம் எந்த அளவிற்கு தலை விரித்தாடுகிறது என்பதற்கு கடந்த சில நாட்களாக வெளிவரும் படங்களின் விளம்பரங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். பழைய படப் பெயர்களை வைப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது, சிலர் வைத்துள்ள பெயர்களைப் பார்த்தால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பலர் தமிழ்த் திரையுலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பழைய செய்தி. எந்த விதமான மொழிப் பற்றும் இல்லாமல் கண்டபடி தலைப்பை வைக்கும் சிலர் மீது ரசிகர்களின் கோபம் அதிகமாகியுள்ளது.
கடந்த சில நாட்களில் செய்திகளாகப் பரவிவரும் படங்களின் தலைப்புகள் என்னென்ன தெரியுமா..?. “ஏண்டா தலையில எண்ண வைக்கல, செம போத ஆகாதே, பீச்சாங்கை, கெட்ட பையன் சார் இவன், ஒத்தைக்கு ஒத்தை, ஒண்டிக்கட்ட, சங்கிலி புங்கிலி கதவ தொற, சைத்தான் கா பச்சா, யங் மங் சங்”.
தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்குத்தான் தமிழக அரசு வரி விலக்கு தரும். அப்படியானால் இந்தப் படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு தருமா?.
0 comments:
Post a Comment