அரவிந்த்சாமிக்கு ஜோடியான அமலாபால்
24 பிப்,2017 - 14:58 IST
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து, சித்திக் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் அப்போதே வெளியானது. அது மட்டுமல்ல, பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்க ஆர்வம் காட்டியதோடு, மற்ற இயக்குநர்கள் இயக்க ஒப்புக்கொள்ளவில்லை. தமிழில் 'ஃப்ரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'சாதுமிரண்டா', 'காவலன்' ஆகிய படங்களை இயக்கியவர் சித்திக். மலையாளத்தில் மம்முட்டி நடித்த கேரக்டரில் அர்விந்த்சாமி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
'சதுரங்க வேட்டை', 'நரகாசூரன்' செல்வா இயக்கும் படம் என பல படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். அர்விந்த்சாமியின் நடிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படம் சம்பந்தமாக இப்போது புதிய தகவல். மலையாளத்தில் நயன்தாரா நடித்த கேரக்டரில் தமிழில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் விஜய்யை திருமணம் செய்த அமலாபாலுக்கு நேற்றுமுன்தினம் தான் விவாகரத்து கிடைத்தது. விவாகரத்து கிடைத்த அடுத்தநாளே அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்கர் தி ராஸ்கல் மலையாளப்படத்தில் பேபி அனிகா நடித்த கேரக்டரில் தமிழில் மீனாவின் மகள் நைனிகா நடிக்க இருக்கிறார்.
0 comments:
Post a Comment