வசூலை விட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம் : அக்சை குமார்
23 பிப்,2017 - 13:39 IST
நடிகர் அக்சை குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜாலி எல்எல்பி-2 படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், அடுத்தடுத்து நீங்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மீடியாக்கள் கேட்டன. அதற்கு பதிலளித்த அக்சை, என்னைப் பொறுத்தவரை பாக்ஸ் ஆபீஸ் வசூலை விட, எனது ரசிகர்களின் அன்பு தான் மிக முக்கியம். போதிய அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டேன் என்றே நான் நினைக்கிறேன். அதனால் சரியான கதை, கேரக்டர், டைரக்டர் மற்றும் பட நிறுவனம் கொண்ட படங்களில் நடிக்க நினைக்கிறேன் என்றார். அக்சை குமார் அடுத்து நடித்து வரும் படம், டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளது.
0 comments:
Post a Comment