இலங்கை ராணுவ தளபதியாக நடித்த டேனியேல் பாலாஜி!
27 பிப்,2017 - 09:31 IST
விஜய்யின் பைரவா படத்திற்கு பிறகு வடசென்னை, வணங்காமுடி, உல்டா, மாயவன் என பல படங்களில் நடித்து வருகிறார் வில்லன் நடிகர் டேனியேல் பாலாஜி. இதில், வடசென்னை படத்தில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டும் கலந்த வேடத்தில் நடிக்கிறாராம். மேலும், பீல்டில் நான் வில்லனாக சித்தரிக்கப்பட்ட போதும், பல படங்களில் மாறுபட்ட கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அதிரடி வேடங்களில் நடிக்கும் என்னால் அமைதியான, செண்டிமென்டான வேடங்களிலும் நடிக்க முடியும் என்கிறார் டேனியேல் பாலாஜி.
மேலும், ஆனந்த் இயக்கத்தில் யாழ் என்றொரு படத்தில் இலங்கை ராணுவ தளபதியாக நடித்திருக்கிறாராம் டேனியேல் பாலாஜி. அதுகுறித்து அவர் கூறுகையில், யாழ் படம் இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது உருவான ஒரு காதலைப் பற்றிய கதையில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்காக தமிழ்நாட்டில் யாழ்ப்பாணம் போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டது. இதில் வில்ல னாக நடித்துள்ள நான், இலங்கை ராணுவ தளபதியாக நடித்துள்ளேன். அதற்காக சிங்கள பாஷை பேசி நடித்திருக்கிறேன். அந்த வேடத்துக்காக நிறை யவே ஹோம் ஒர்க் செய்து கம்பீரமாக நடித்தேன் என்கிறார் டேனியேல் பாலாஜி.
0 comments:
Post a Comment