Sunday, February 26, 2017

சந்தோச பயத்தில் இருக்கிறேன்! -நடிகர் அசார் பேட்டி


சந்தோச பயத்தில் இருக்கிறேன்! -நடிகர் அசார் பேட்டி



27 பிப்,2017 - 09:23 IST






எழுத்தின் அளவு:








ஆதித்யா சேனல் தொகுப்பாளரான அசார், தற்போது ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல -என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானா தயாரித்து, இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயம்ரவி வெளியிட்டார். அதை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் செய்துள்ளனர். இதனால் படநாயகன் அசார் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அதுகுறித்து அசார் கூறுகையில், ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல படத்தில் ட்ரெய்லரை வெளியிட்ட ஜெயம்ரவி சார் பாராட்டினர். அதையடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ரோபோ சங்கர் என பல திரையுலகினரும் பாராட்டி டுவிட் செய்து வருகின்றனர். குறிப்பாக, யு-டியூப்பில் பெரிய நடிகர்களுக்கு மட்டும்தான் டிரண்டிங் என ஒன்று வரும். அதிக பேர் பார்த்தா டிரண்டிங் வரும். யு- டியூப்பை ஓப்பன் பண்ணினாலே முதலிடத்தில் வந்து நிற்கும். விஜய் அஜீத், சூர்யா போன்றவர்களுக்குதான் டிரண்டிங் வரும். அதேபோல் மக்கள் கொடுத்த ஆதரவினால் இப்போது என் படத்திற்கும் அந்த டிரண்டிங் வந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே என்கிற மாதிரி எல்லா புகழும் மக்களுக்கே.

இது ரொம்ப சந்தோசமான விசயம். என்றாலும் எனக்கு பயம் அதிகமாகிவிட்டது. கல்யாண மண்டபத்துக்கு வந்திருக்கிற எல்லோரும் சந்தோசமாக இருப்பாங்க. ஆனா பொண்ணு மாப்பிள்ளைக்கு மட்டும் திக்திக் என்றிருக்கும். அடுத்து வாழப்போற வாழ்க்கை எப்படியிருக்கும். இந்த பொண்ணு நம்மை புரிந்து கொள்வாளா என மாப்பிள்ளை பயந்து கொண்டிருப்பார். அதேபோல் பெண்ணும் மனரீதியாக பயந்து கொண்டிருப்பார். இரண்டுபேருமே ஒவ்வொரு விதத்தில் பயந்து கொண்டிருப்பார்கள். அதேமாதிரி பரீட்சை எழுதும்போதுகூட பயமிருக்காது. ரிசல்ட் வரும்போது பயமாக இருக்கும். ஜூரமே வந்திடும். அந்த பயம்தான் இப்போது எனக்கு வந்துள்ளது.

மக்கள் டிரெய்லர் நன்றாக இருப்பதாக ஆதரவு கொடுத்து விட்டனர். குறிப்பாக, இந்த நேரத்தில் வேறு எந்த படத்தோட ட்ரெய்லரும் என் படத்தை ஒப்பிடுவது மாதிரி வரவில்லை. இரண்டே நாள்ல 45 லட்சம் பேர் யு-டியூப்பில் பார்த்திருக்கிறார்கள். ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பெரிய விசயம். மக்களுக்கும், இந்த படத் தயாரிப்பாளர் ரெஹானா மேடத்துக்கும், இயக்குனர் விக்னேஷ்கார்த்திக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

நான், டிவி, வானொலிகளில் பலரை சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால் படம் என்று போகும்போது நம்மளை ஏற்றுக்கொள்ள வேண்டுமில்லையா. உனக்கு நாங்க இருக்கிறோம் டிவியில் கொடுத்த ஆதரவை மாதிரி சினிமாவிலும் கொடுப் போம் என்று கொடுத்திருப்பது உண்மையிலேயே நம்ப முடியல. கனவு மாதிரி இருக்கு. அப்துல்கலாம் சொன்ன கனவு இப்பத்தான் எனக்கு பலிக்குது. கனவு காணுங்கள் என்று சொன்னாரில்லையா. தூங்கும்போது வருவது கனவு கிடையாது. தூங்க விடாமல் செய்வதுதான் கனவு என்பது மாதிரி நேற்று இரவு இந்த டிரெண்டிங்கைப் பார்த்து நள்ளிரவு இரண்டறை மணி வரை தூக்கமே வரவில்லை. இன்னும் எத்தனை பேர் பாராட்டினார்கள் என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தேன்.

இப்போது எனக்கு சந்தோசத்தைவிட பயம்தான் அதிகமாகியுள்ளது. ஒரு பேட்டியில் விஜய் சார் சொன்னார், ஜெயிக்கிறது பெரிய விசயமில்லை. இன்னும் அடுத்தது சரியாக கொடுக்கனுங்கிற பயம் வரும் என்றார். அந்தவகையில் எனக்கு ஒரு சந்தோசமான பயம் வந்துள்ளது. இந்த படத்தில் யோகிபாபு, சிங் கப்பூர் ஸ்டீபன், மன்சூரலிகான், சஞ்சிதா ஷெட்டி, ஈடன் என இரண்டு நாயகிகள். இரண்டுபேருமே என்னை விட சீனியர் என்றாலும் எந்தவித காம்ப்ளக்சும் இல்லாமல் நடித்தனர். அதனால் படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படம் எனக்கு பெரிய பிரேக்காக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் அசார்.


0 comments:

Post a Comment