வில்லியாக மாறிய கேத்ரின் தெரஸா
22 பிப்,2017 - 09:47 IST
தமிழில் கணிதன், கதகளி போன்ற படங்களில் நாயகியாக நடித்த கேத்ரின் தெரஸாவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் வில்லி வேடத்தில் நடித்து வருகின்றார். தெலுங்கு படங்களில் நாயகியாக அறிமுகமான கேத்ரினுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகின்றார். ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னோடு படத்தில் அரசியல்வாதியாக நடித்த கேத்ரின் மீண்டும் அரசியல்வாதியாக ராணாவின் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் நடித்து வருகின்றார். அதிலும் வில்லியான அரசியல்வாதியாக கேத்ரின் நடிக்கின்றாராம். இக்கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறியபோது மறுப்பேதும் கூறாமல் கேத்ரின் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இயக்குனர் தேஜா இயக்கும் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் ராணாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார்.
0 comments:
Post a Comment