Friday, February 24, 2017

அரவிந்த்சாமியின் தோழியாக நடிக்க மறுத்த பிரியாமணி


அரவிந்த்சாமியின் தோழியாக நடிக்க மறுத்த பிரியாமணி



24 பிப்,2017 - 11:44 IST






எழுத்தின் அளவு:








பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. அதையடுத்து பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம், அமீரின் பருத்தி வீரன் படங்களில் நடித்து பிரபலமானவர், பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றார். ஆனால் பின்னர் அவருக்கு தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. மலைக்கோட்டை, ராவணன், சாருலதா போன்ற படங்களில் நடித்தவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்து வந்தார். இப்போதும் அவர் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடித்து வரும் வணங்காமுடி படத்தில் அரவிந்த்சாமியின் தோழி வேடத்தில் நடிக்க பிரியாமணிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தற்போது துபாயில் இருக்கும் பிரியாமணி, தோழி வேடம் என்றதும் பெரிதாக ரெஸ்பான்ஸ் பண்ணவில்லையாம். அதன்பிறகுதான் அந்த வேடத்தில் நடிக்க சிம்ரனை அணுகியுள்ளனர். கதைப்படி இந்த படத்தில் போலீசாக நடிக்கும் சிம்ரன், அரவிந்த்சாமிக்கு உதவி செய்யும் போலீசாக படம் முழுக்க நடிக்கிறாராம்.


0 comments:

Post a Comment