தற்போது கோலிவுட்டுக்கு பல திறமை வாய்ந்த இளம் கலைஞர்கள் அறிமுகமாகி வருகின்றனர். அதிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் திறமையை வெளிக்காட்டும் பலரும் தங்களது அடுத்த அடியை கோலிவுட்டில்தான் பதிக்கிறார்கள்.
அந்த வரிசையில், சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற கண் தெரியாத இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஜோதி, பேஸ்புக் இணையதளத்தில் தனது குரலில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ், அடுத்ததான தான் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment