சிலம்பாட்ட பயிற்சி
23 பிப்,2017 - 00:50 IST
கவுதம் கார்த்திக், நெப்போலியன் கூட்டணியில், நாளை வெளியாகவுள்ள முத்துராமலிங்கம், சிலம்பாட்ட கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாம். நெப்போலியன் தந்தையாகவும், கவுதம் கார்த்திக் மகனாகவும் நடித்துள்ளனர். நெப்போலியனுக்கு ஏற்கனவே சிலம்பாட்ட பயிற்சி பெற்ற அனுபவம் இருந்ததால், எளிதாக நடித்து முடித்தாராம். கவுதம் கார்த்திக், 40 நாட்கள் முறைப்படி சிலம்பப் பயிற்சி பெற்று, அதற்கு பின் தான், நடிக்க வந்தாராம். இந்த படத்தில், சிலம்பாட்டம் தொடர்பான எட்டு சண்டை காட்சிகள் உள்ளதாம். மண் மணம் கமழும் படத்தை எதிர்பார்த்து, காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம், நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு.
Advertisement
0 comments:
Post a Comment