Tuesday, February 28, 2017

ஜெய்பிரகாஷாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!


ஜெய்பிரகாஷாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!



28 பிப்,2017 - 14:13 IST






எழுத்தின் அளவு:








தாரைத்தப்பட்டைக்குப் பிறகு குற்றப்பரம்பரை காலகட்டத்தில் நடந்த ஒரு கதையை படமாக்க தயாரானார் பாலா. அந்த கதையில் நடிக்க அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, ராணா என பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முடி வெடுத்திருந்தார். அப்போது தனது குற்றப்பரம்பரை கதையைத்தான் பாலா படமாக்குகிறார் என்று பாரதிராஜாதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து அந்த காலகட்டத்தில் நடந்த வேறொரு கதையைத்தான் நான் படமாக்குகிறேன் என்று குரல் கொடுத்தார் பாலா.

பின்னர், அந்த கதை இல்லாமல் வேறொரு காதல் கதையை படமாக்கப்போவதாக சாட்டை யுவன், சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி ஆகியோரை அழைத்து பேசியிருந்தார். அந்த கதைகூட தேவர் பையனுக்கும், பிராமண பெண்ணுக்குமிடையே உருவாகும் காதலை மையப்படுத்தியது என்றும் கூறப்பட்டது. தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் பாலாவின் புதிய படத்தில் நடிப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இந்த படத்தில் ஜோதிகாவும், ஜி.வி.பிரகாசும் அக்காள் தம்பியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு சென்னை விருகம் பாக்கத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை தழுவி இந்த படம் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரே நேரத்தில் ஒன்பது பேரை கொலை செய்த ஜெய்பிரகாஷ் என்பவரின் கேரக்டரில்தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாராம். ஆக, இதுவும் கொலைக்குற்றம் செய்த குற்றப்பரம்பரை கதைதான்.


0 comments:

Post a Comment