பாவனா விவகாரம் ; திலீப் பக்கம் கைகாட்டும் விஷமிகள்..!
22 பிப்,2017 - 14:57 IST
சில தினங்களுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவாகரத்தின் பின்னணியில் ஒரு மலையாள நடிகர் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் வேளையில், அது நடிகர் திலீப் தான் என சில விஷமிகள் கொளுத்திப்போட்டுள்ளனர். திலீப்புக்கும் பாவனாவுக்கும் ஏற்கனவே கருத்துவேறுபாடும் மனஸ்தாபமும் உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அதை பயன்படுத்தி சிலர் இவ்வாறு வதந்தியை பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் பாவனா ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு வரும் வாய்ப்புகளை முன்னணி நடிகர் ஒருவர் குறுக்கிட்டு தடுத்துவிடும் வேலையை செய்து வருகிறார் என பகீர் கிளப்பினார்.. ஆனால் அவருடைய பெயரை மட்டும் கடைசி வரை சொல்ல மறுத்துவிட்டார் பாவனா.. அப்படி என்ன பாவனா மீது அந்த நடிகருக்கு கோபமாம்..? சில வருடங்களுக்கு முன் பாவனாவின் தோழி ஒருவர் அவரிடம் தனது குடும்ப பிரச்சனையில் தலையிட்டு தீர்த்து வைக்குமாறு உதவி கேட்டாராம். பாவனாவும் அது நம் கடமைதானே என நினைத்து, அதில் தலையிட்டு தீர்த்து வைக்க, இது சம்பந்தப்பட்ட நடிகரை எந்தவிதத்திலோ பாதித்து விட்டதாம்.
0 comments:
Post a Comment