Saturday, February 25, 2017

போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்: பேட்மிட்டன் கதை


போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்: பேட்மிட்டன் கதை



25 பிப்,2017 - 11:37 IST






எழுத்தின் அளவு:








"போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்" என்கிற தலைப்புதான் வில்லங்கமாக இருக்கிறதே தவிர இது இந்தியாவில் முதன் முறையாக பேட்மிட்டன் (பூபந்து) விளையாட்டை மையமாக கொண்ட படம். தலைப்புகான காரணம் படம் வெளிவரும்போது தெரியும். படம் பார்த்து திரும்பும்போது சரியான தலைப்புதான் என்ற சொல்வார்கள்" என்கிறார் இயக்குனர் ராஜபல்லவி ராஜா. படம் பற்றி அவர் மேலும் கூறியதாவது:

வெண்ணிலா கபடி குழு கபடி பேசியது, ஜீவா, சென்னை 28 படங்கள் கிரிக்கெட்டை பேசியது, பூலோகம், இறுதிசுற்று படம் குத்துச் சண்டை பேசியது. சுண்டாட்டம் படம் கேரம்போர்ட் விளையாட்டை பேசியது. அதுமாதிரி இந்தப் படம் பேட்மிட்டன் விளையாட்டை பேசுகிறது. சாதாரண ஒரு இளைஞன் பேட்மிட்டன் விளையாட்டில் பெரிய இடத்துக்கு வருதற்கு எப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்திக்கிறான் என்பதுதான் கதை" என்றார்.

இந்தப் படத்தில் புதுமுகம் ஸ்ரீராம், விஜய், சஹானா, ரசிகா, ராஜேஷ், ஒலிவா, மர்லின், ஏ.ஜே.ஹரிஷரன் நடிக்கிறார்கள்., ஸ்ரீராம் இசை அமைக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.


0 comments:

Post a Comment