தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி ஒருகும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பாவனா வின் கார் டிரைவர் மார்ட்டின் மற்றும் கோவையில் பதுங்கி இருந்த கூட்டாளிகள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலக்காடு பகுதியில் நேற்று கூலிப்படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கைதானார். இவர்களை தவிர முக்கிய குற்றவாளியான சுனில்குமார், விஜேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சுனில்குமார், விஜேஷ் இருவரும் முன் ஜாமீன் கேட்டு கேரள கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இவர்கள் இருவரும் இன்று அல்லது நாளை கோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கோர்ட்டில் சரண் அடையும் முன்பு இருவரையும் கைது செய்து விட போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
நடிகை பாவனாவிற்கு நேர்ந்த கொடுமை குறித்து கேரள அரசியல் பிரமுகர்களும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் கேரள மாநில பொதுச்செயலாளர் ஏ.என். ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேரள திரையுலகில் மாபியாக்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. திரையுலக மாபியாக்களுக்கு ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அடைக்கலம் கொடுக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ், மலையாள சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் தொடர்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநில முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் மலையாள நடிகராகவும் உள்ளார். பாவனா விவகாரம் குறித்து இவர் கூறியதாவது:-
கேரள சினிமாத்துறையில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கொச்சியில் இருந்து இப்பின்னணியில் வரும் படங்களே இதற்கு சாட்சி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment