Tuesday, February 21, 2017

பாவனா போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்த பல்சர் சுனில்..!


பாவனா போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்த பல்சர் சுனில்..!



21 பிப்,2017 - 15:13 IST






எழுத்தின் அளவு:








நடிகை பாவனாவை கடந்த வெள்ளியன்று இரவு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் காரை மறித்து, கடத்திச்சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் முதன்மை குற்றவாளி தான் பல்சர் சுனி(ல்). மலையாள தயாரிப்பாளர் ஒருவர் இந்த சம்பவத்திற்குப்பின் இவனைப்பற்றி விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்..

அவர் கூறிய தகவல்களின்படி, இந்த பல்சர் சுனி, பாவனா நடிக்கும் படங்களின் ஷூட்டிங்ஸ்பாட், அவர் டப்பிங் பேச செல்லும் ஸ்டுடியோ என எல்லா இடத்திற்கும் ட்ரைவராக வந்து நிற்பானாம்.. ஷூட்டிங்கிற்கு கார் அனுப்பும் நிறுவனங்கள் இவனுக்கு பழக்கம் என்பதால் இவன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளான்.. சம்பவ தினத்தன்று கூட பாவனாவுக்கு இவன் தான் கார் ஓட்ட வேண்டிய முறை.. ஆனால் ஏதோ சில காரணங்களை சொல்லி தனக்கு பதிலாக ட்ரைவர் மார்ட்டின் ஓட்டுவார் என அவரை நுழைத்துவிட்டுள்ளான்.. இதுவும் இவனது திட்டத்தின் ஒரு படி தானாம்.

இவன் லீவு போட்டுவிட்டாலும் கூட, அன்றைய தினம் பாவனாவின் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கும் வந்துள்ளான். அங்கே அவனை பார்த்த புரடக்சன் மேனேஜர், நீ எங்கே இங்கே..? லீவு போட்டிருந்தாயே என கேட்டுள்ளார்., தான் வேறு ஒரு பிசினஸ் விஷயமாக பணம் புரட்டுவதற்காக கிளம்பியதால் இன்று கார் ஓட்டவில்லை என்று கூறியுள்ளான் சுனில்.. அதன்பின்னர் தான் ஷூட்டிங் முடிந்து மார்ட்டினின் காரில் வந்த பாவனாவை கடத்தி, பாலியல் சித்ரவதை செய்து படம் பிடித்துள்ளான். இதிலிருந்து அவன் பாவனாவை கடத்துவதற்கு நீண்ட நாட்களாக திட்டம் இட்டிருந்தான் என்பது நன்றாகவே தெரிகிறது என கூறியுள்ளார் அந்த தயாரிப்பாளர்.


0 comments:

Post a Comment