கலாபவன் மணி வழக்கில் இருந்து விலகும் முடிவில் போலீஸார்..!
22 பிப்,2017 - 14:35 IST
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணத்தை தழுவி கிட்டத்தட்ட ஒரு வருடம் முடியப்போகிறது.. அவர் மரணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் உள்ளது என மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டும் கூட, அதற்கு காரணமானவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ்.. கலாபவன் மணியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், அவரது கெஸ்ட் ஹவுஸுக்கு வந்துசெல்பவர்கள் அனைவரையும் விசாரித்தும் எந்த பலனும் இல்லை.. அட்லீஸ்ட் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதைக்கூட முடிவுசெய்ய போலீசாரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை..
இந்தநிலையில் கேரள போலீசார் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இதைத்தொடர்ந்து வழக்கு சி.பி.ஐக்கு கைமாறுமா என்பது போகப்போகத்தான் தெரியவரும்.. கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன், ஆரம்பத்தில் இருந்தே இது தற்கொலையல்ல, திட்டமிட்ட கொலை என்றும், இதை போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை, அதனால் சிபிஐக்கு வழக்கை மாற்றுங்கள் என்றும் கடந்த சில மாதங்களாகவே கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment