Tuesday, February 21, 2017

நடிகைகளின் கால்சீட் பிரச்சினையால் சாந்தினிக்கு கிடைத்த வாய்ப்பு!


நடிகைகளின் கால்சீட் பிரச்சினையால் சாந்தினிக்கு கிடைத்த வாய்ப்பு!



22 பிப்,2017 - 09:27 IST






எழுத்தின் அளவு:








செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் வணங்காமுடி. ஒரு உளவுத்துறை அதிகாரியை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமியுடன் இறுதிச்சுற்று ரித்திகா சிங், அட்டகத்தி நந்திதா, சாந்தினி, சாரிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தற்போது சாந்தினி கமிட்டாகியிருக்கும் வேடத்தில் முதலில் இனியாவிடம்தான் பேசினார். ஆனால் அவர் மலையாள படங்களில் நடித்து வருவதால் கால்சீட் பிரச்சினையால் விலகிக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பட்டதாரி படத்தில் நடித்த அதிதிமேனனிடம் பேசப்பட்டது. அரவிந்த்சாமி படம் என்றதும் அந்த படத்தில் நடிப்பதில் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், அவர் அதற்கு முன்பே கமிட்டாகியிருந்த சந்தனத்தேவன் படப்பிடிப்பு நடைபெறயிருந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே டைரக்டர் செல்வாவும் கால்சீட் கேட்டதால், தனது இயலாமையை சொல்லி வில கிக்கொண்டார் அதிதிமேனன். அதன்பிறகுதான் வணங்காமுடியில் சாந்தினி கமிட்டாகியிருக்கிறார். ஆக, இனியா, அதிதிமேனன் என்ற இரண்டு நடிகைகளின் கால்சீட் பிரச்சினையால் அந்த வாய்ப்பு சாந்தினிக்கு கிடைத்துள்ளது.



0 comments:

Post a Comment