Friday, February 24, 2017

எமன் விமர்சனம்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன், சங்கிலி முருகன், சார்லி, சுவாமிநாதன் மாரிமுத்து மற்றும் பலர்.
இயக்கம் : ஜீவா சங்கர்
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவாளர் : ஜீவா சங்கர்
எடிட்டிங் : வீர செந்தில்ராஜ்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : லைகா புரொடக்சன்ஸ் & விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்


yaman dance


கதைக்களம்…


தான் பிறந்த ஒரு வாரத்திலேயே பெற்றோரை இழக்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் இவருக்கு எமன் என்ற பட்டபெயர் வந்துவிடுகிறது.


30 வருடங்களுக்கு பின், தன்னை வளர்க்கும் தாத்தாவின் ஆப்ரேசனுக்காக பணம் தேவைப்படுகிறது.


எனவே செய்யாத ஒரு குற்றத்திற்காக (குற்றவாளிக்கு பதிலாக) ஜெயிலுக்கு போனால் பணம் கிடைக்கும் என்கிறார் சுவாமிநாதன்.


அதன்படி ஜெயிலுக்குபோக, சில அரசியல்வாதிகள் சந்திக்கிறார். அதன்படி வெளியில் வந்தபின் ஒவ்வொருவராக இவர் சந்திக்க, இவரின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே எமன்.


yaman jodi


கதாபாத்திரங்கள்…


அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் ஆண்டனி. இரண்டிலும் ரசிக்க வைக்கிறார்.


சிறந்த அரசியல்வாதி தன் ஒவ்வொரு அடியையும் எவ்வளவு நிதானமாக எடுத்து வைப்பாரோ? அப்படி அளந்து நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.


எம்மேல கை வச்ச காலி பாடலில் டான்ஸ் ஆட முயற்சிப்பது காமெடி. பாடல் ரசிக்க வைத்தாலும் மூவ்மெண்ட்ஸ் வரல.


எப்போது மிகையில்லாத நடிப்பை தருபவர் மியா ஜார்ஜ். இதிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.


டமீலோ டூமிலோ என்ற பாடல் வெஸ்டர்ன் பாணி என்றாலும் அதிலும் மேனியை முழுவதுமாக மூடி இருப்பது கொஞ்சம் ஓவர்தான். ஆனால் கிளாமரில் முதல் அடியை எடுத்து வைத்திருப்பதால் பாராட்டலாம்.


நீண்ட நாட்களுக்கு பிறகு சைலண்ட் வில்லன் ரோல். தியாகராஜன் தன் நடிப்பில் உள்ளங்களை திருடுவது நிச்சயம்.


தான் வரும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் சார்லி. சங்கிலிமுருகன், சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பான தேர்வு.


இவர்களுடன் ஏகப்பட்ட வில்லன்கள். அரசியல் களம் என்பதால் அப்படியோ? ஆனாலும் எல்லா கேரக்டர்களும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.


yaman 1


தொழில்நுட்ப கலைஞர்கள்…


டைரக்டரே ஒளிப்பதிவாளர் என்பதால் இரண்டிலும் ஜெயிக்கிறார்.


சீரியசான படத்திற்கு பாடல்கள் தேவையில்லாத பீலிங்ஸ் இருக்கு.


ஆனாலும் எம்மேல கை வச்சா, கடவுள் எனும் கவிதை ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.


முக்கியமாக பின்னணி இசை பெரிதாக பேசப்படும். படத்தின் தீம் மியூசிக் தியேட்டரில் விட்டு வந்தாலும் ஒலிக்கும்.


Yaman director team


இயக்குனர் பற்றிய அலசல்…


விஜய் ஆண்டனிக்காக பின்னப்பட்ட கதையை பிட்டாக கொடுத்திருக்கிறார் ஜீவா சங்கர்.


விறுவிறுப்பான கதைக்களம், அதிரடியான வசனங்கள் என நல்ல ப்ளாட்பார்ம் இருந்தாலும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.


அரசியல்வாதிகள் எல்லாருமே சாமானிய மனிதர்கள்தான். ஆனால் சராசரி மனிதன் திடீரென இன்றைய அரசியலில் இப்படி உருவெடுக்க முடியுமா?  என்பது டவுட்தான்.


சினிமா நடிகை, திடீரென விஜய் ஆண்டனியை நம்புவது எப்படி? என்று தெரியவில்லை.


பதவிக்காக ஒரு அரசியல்வாதி எதையும் செய்வான். அவன் மனித முகம் கொண்ட மிருகம் என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார் ஜீவாசங்கர்.


எமன்… அரசியல்வாதியின் அசல் முகம்

0 comments:

Post a Comment