காதலால் மட்டுமே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்! -இயக்குனர் ஆர்.ஜே.பிரகாஷ்
22 பிப்,2017 - 09:07 IST
பதனி என்கிற திரவம் நீர்ச்சத்து உள்ளடக்கிய அத்தனை சத்துக்களும் கொண்டது. அதேமாதிரி மனித சமுதாயத்தில் இருக்கிற அத்தனை உணர்வுகளும் எனது பதனி படத்தில் உள்ளது என்கிறார் இயக்குனர் ஆர்.ஜே.பிரகாஷ்.
பதனி படம் குறித்து அவர் மேலும் கூறும்போது, திருட்டு, வஞ்சகம், புகழ், பயம், வெகுளித்தனம் எல்லாவற்றையும் கலந்த உணர்வாக இந்த கதையை பண்ணியிருக்கிறேன். காதலின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதை சொல்லும் இந்த கதையில், எதிர்காலம் குறித்து பெரிதாக சொல்லாமல் சாட் கட்டில் முடித்துள் ளேன். மேலும், கடந்த காலத்தில் விதவையை ஒரு அவச்சொல்லாகவே பார்த்தோம். விதவைக்கு ஒரு மறுவாழ்வு தரலாம் என்பதை யும் பதனியில் சொல்லியிருக்கிறோம்.
இது ஒரு மிகப்பெரிய நாட்டாக இருக்கும். உலகத்தில் இருக்கிற எல்லா சினிமாக்காரர்களுக்கும் பதனி என்பது பிடிக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த கதையை படமாக்கியிருக்கிறேன். இந்த படத்தின் சண்டை காட்சிகளை டேஞ்சர் மணி பண்ணியிருக்கிறார். சுபாஷ் நாயகனாக நடித்துள்ளார். வில்லன் மேஜிக் சல்மானும் நன்றாக பண்ணியிருக்கிறார்கள். சினிமா ரசிகர்களுக்கும், சினிமாவை நேசிப்பவர்களுக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்.
குறிப்பாக, யூத்துக்கு தேவையான விசயங்களை இந்த படத்தில் வைத்திருக்கிறேன். காதலர்கள், திருமணமானவர்கள், திருமணமாகி குழந்தைகள் பெற்ற வர்கள் என அனைவருக்கும் இந்த படத்தில் விசயம் உள்ளது. ஒட்டு மொத்த கலவையாகத்தான் இந்த படம் உள்ளது. இன்றைக்கு இருக்கிற மோசமான சமுதாயத்தில் காதலால் மட்டுமே ஒரு நல்ல வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து. அதனால் யதார்த்தமான இந்த காதல் கதை நிச்சயமாக ஜனங்களுக்கு பிடிக்கும்.
அதோடு, இந்த படத்தில் காதலுக்கு முன் னால் உள்ள விசயங்களைத்தான் காண்பித்திருக்கிறேன். அவர்கள் நண்பர் களாக இருக்கும்போது ஏற்படும் காதல் ஈர்ப்பைத்தான் காட்சி பண்ணியிருக்கிறேன். தற்போது படவேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட பதனி படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது என்கிறார் இயக்குனர் ஆர்.ஜே.பிரகாஷ்.
0 comments:
Post a Comment