Thursday, February 23, 2017

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி


பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி



24 பிப்,2017 - 10:37 IST






எழுத்தின் அளவு:








மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தன் மனைவி சதானந்தவதி மீது அதீத பாசம் கொண்டவர். சதானந்தவதி எம்.ஜி.ஆரின் உறவினர்களையெல்லாம் அரவணைத்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார். ஆனால் சதானந்தவதியை டி.பி எனப்படும் காசநோய் தாக்கியது. அப்போது காச நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் எம்.ஜி.ஆர் அப்போதிருந்த உயர்ரக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். சதானந்தவதியின் விலா எலும்புகள் அரித்து விட்டதால் அதற்கு பதில் வெள்ளியிலான எலும்புகளை பொருத்தினார்கள். அப்படி இருந்தும் அவர் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஒரு நாள் எம்.ஜி.ஆரை அருகில் அழைத்த சதானந்தவதி அம்மாள் "என்னதான் நீங்கள் கஷ்டப்பட்டாலும் நான் இறப்பது உறுதி. நான் சாவதற்கு முன் என் இடத்தில் ஒருத்தியை உட்காரவைத்து விட்டு போக விரும்புகிறேன். என் கண்முன்னாடியே நீங்கள் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்" என்றார். ஆரம்பதில் எம்.ஜி.ஆர் அதற்கு உடன்படவில்லை. மிகுந்த சோகத்துடன் தன் வாழ்நாளை கடத்தி வந்தார். அப்போது எம்.ஜி.ஆர் மோகினி என்ற படத்தில் உடன் நடித்த வி.என்.ஜானகியுடன் தன் சோகத்தை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் வி.என்.ஜானகி "உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்கள் மனைவியின் கோரிக்கையை நான் நிறைவேற்றித் தருகிறேன்" என்றார். அன்று முதல் எம்.ஜி.ஆருக்கு வி.என்.ஜானகி மீது அன்பும், காதலும் அதிகமானது. அடுத்து இருவரும் மருதநாட்டு இளவரசியில் இணைந்து நடித்தனர். சதானந்தவதி அம்மாளின் கடைசி நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகியை மனைவி சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். அவரை பார்த்த சதானந்தவதி "என் கணவனுக்கு பொருத்தமானவளாக நீ இருக்கிறாய். அவர் தன் தாய் மீதும். என் மீதும் தீராத அன்பு வைத்திருந்தார். நீங்கள் என் இடத்தில் இருந்து அவருக்கு துணையாக கடைசி வரை இருக்க வேண்டும். என் மரணம் வரை காத்திருக்க வேண்டாம் இப்போதே நீங்கள் திருமணம் செய்து கொண்டு உங்கள் வாழ்க்கையை துவக்கலாம்" என்றார்.

இது நடந்த ஒரு சில நாட்களுக்கு பிறகு சதானந்தவதி அம்மாள் மரணம் அடைந்தார். அவரை நம்பி வந்த சதானந்தவதி அம்மாளின் குடும்பம் சிரமப்படக்கூடாது என்பதற்காக சதானந்தவதியம்மாள் வசித்த வீட்டையும் அவருக்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சில சொத்துக்களையும் சதானதந்தவதி அம்மாவின் குடும்பத்திற்கே கொடுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.


0 comments:

Post a Comment