தெறி கூட்டணி மீண்டும் விஜய் 61 படத்திற்காக இணைகிறது.விஜய்யின் நண்பன் படத்தில் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றினார் அட்லி.
அதன்படி பார்த்தால் விஜய்யுடன் 3வது முறையாக இணைகிறார்.சரி இந்த டைரக்டர் சென்டிமெண்ட்ஸ் தவிர விஜய்யுடன் 3வது முறை இணைபவர்கள் யார்..? என்பதை பார்ப்போம்.
நண்பன் மற்றும் தலைவா படத்தை தொடர்ந்து சத்யராஜும் 3வது முறை இணைகிறார்.இவர்களை அடுத்து எஸ்.ஜே.சூர்யா. குஷி, நண்பனை தொடர்ந்து 3வது முறை.சமந்தா இதற்கு முன் கத்தி, தெறியில் நடித்துள்ளார். எனவே இவருக்கும் 3வது முறை.
துப்பாக்கி, ஜில்லாவில் நடித்த காஜல் அகர்வாலுக்கும் இது 3வது முறை.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் 3வது முறையாக இணைந்துள்ளனர்.
உதயா மற்றும் அழகிய தமிழ்மகன் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ஆர்.இத்தனை முத்தான சென்டிமெண்ட்களை வைத்திருக்கும் விஜய் 61 நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கலாம்.
திருமலை, குஷி படத்தில் நடித்த் ஜோதிகா விலகாமல் இருந்திருந்தால் அவருக்கும் இது 3வது முறைதான்.
0 comments:
Post a Comment