துணிச்சலான நிருபர் வேடத்தில் அர்ச்சனா சிங்!
25 பிப்,2017 - 08:58 IST
யானை மேல குதிரை சவாரி உள்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை அர்ச்சனா சிங். தற்போது பாபநாசம் படத்தில் கெளதமியின் தம்பியாக நடித்த அபிஷேக் நாயகனாக நடிக்கும் மெருலி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர வேறு சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டிருப்பதாக சொல்கிறார் அர்ச்சனா சிங்.
அவர் கூறும்போது, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதில் மெருலி தமிழ்ப்படத்தில் துணிச்சலான நிருபர் வேடத்தில் நடிக்கிறேன். சில சமூக விரோதிகள் பற்றிய தகவல்களை பத்திரிகையில் வெளியிட்டதால், பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் வேடம். அதிலிருந்து நான் எப்படி தப்பித்து வெளியே வருகிறேன். குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுகிறேன் என்பது போன்ற கேரக்டர். அதனால் இந்த படம் தமிழில் எனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், கிளாமரைப்பொறுத்தவரை நயன்தாரா, திரிஷாதான் எனது ரோல் மாடல். அவர்கள் எந்த அளவுக்கு படங்களில் நடித்திருக்கிறார்களோ அந்த அளவுக்கு கிளாமராக நடிப்பேன். அதேசமயம், முன்னணி ஹீரோக்களுடன் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாட வேண்டும் என்று யாராவது அழைத்தால், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி நடித்தது போன்று நடிப்பேன். கிளாமரை அழகியலோடு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்கிறார் அர்ச்சனா சிங்.
0 comments:
Post a Comment