Tuesday, January 3, 2017

ரமேஷ் திலக் என்ன மாதிரி ஆளுன்னு எனக்கு தெரியும் – RJ நவலக்ஷ்மி



ரமேஷ் திலக் என்ன மாதிரி ஆளுன்னு எனக்கு தெரியும் – RJ நவலக்ஷ்மி








தமிழ் சினிமாவில் சூது கவ்வும் மூலம் நடிப்பு உலகில் அறியப்பட்டவர் ரமேஷ் திலக். அதன் பிறகு காக்க முட்டை, ஒரு நாள் கூத்து போன்ற தரமான படங்களின் மூலம் முத்திரை பதித்தார். இந்நிலையில் இவருக்கும் ஆர்.ஜே.நவலட்சுமிக்கும் மிக விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.


இந்த காதல் விவகாரத்தை நவலட்சுமி புத்தாண்டு அன்று வெளியுலகிற்கு தெரிவித்தார். இவர்களின் காதலை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நவலட்சுமி கூறுகையில், முதல் முறை ரமேஷ் என்னிடம் காதலை சொல்லும்போது செம்ம ஷாக், நான் அவரிடம் வீட்டில் வந்து பேசுங்கள் என்று கூறினார் .


உடனே வீட்டுக்கு வந்து பேசி எல்லாரிடமும் சம்மதமும் வாங்கினார். ரொம்ப ஜாலியான, என்னை முழுசா புரிஞ்சிக்கிறவர் ரமேஷ் திலக், நீங்க படங்களில் பார்க்குறதை விட செம ஜாலியா தான் இருப்பார். நான் எப்போதுமே சிரிச்சிட்டே இருக்கணும்னு நினைக்கிற ரொம்ப உண்மையான மனிதர். இப்போ வரைக்கும் என்னை ரொம்ப பத்திரமா பார்த்துக்குறார். என் வாழ்க்கை முழுவதும் என்னை பத்திரமா பார்த்துப்பார்னு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment