திலீப்புடன் 4வது முறையாக ஜோடி சேரும் நமீதா..!
15 மார்,2017 - 15:43 IST
மலையாளத்தில் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தை அடுத்து திலீப் நாயகனாக நடித்துவரும் படம் 'கம்மர சம்பவம்'. இந்தப்படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட். தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சித்தார்த்தின் முதல் மலையாள பிரவேசம் இந்தப்படத்தின் மூலம் தான் நிகழ இருக்கிறது. அதுமட்டுமல்ல, கூடவே பாபி சிம்ஹாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அதேபோல தமன்னாவும் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு, பின்னர் தமன்னாவால் அது உண்மையில்லை என மறுக்கப்பட்டும் விட்டது..
இப்போது தமன்னா நடிக்க இருந்ததாக சொல்லப்பட்ட கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் எப்போதும் புன்னகை சிந்தும் முகத்துக்கு சொந்தக்காரரான நமீதா பிரமோத்.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் 'சவுன்ட் தோமா', 'வில்லாளி வீரன்' மற்றும் 'சந்திரேட்டன் எவிடயா' ஆகிய படங்களை தொடர்ந்து திலீப்புடன் இவர் இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது. திலீப், சமீபத்தில் தான் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார் என்பதால், இந்த ஜோடி நான்காவது முறையாக இணைந்து நடிப்பது பற்றி கிசுகிசு ஏதும் வராது என தாராளமாக நம்பலாம்.
0 comments:
Post a Comment