ஒரு பக்கம் மகிழ்ச்சி... மறுபக்கம் பீதி!
05 நவ,2016 - 11:50 IST
வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்களை வெளியிடுவது என்பது காலம்காலமாக கடை பிடிக்கப்பட்டு வரும் வழக்கம். இந்த வழக்கம் சமீபகாலமாக மாறிக் கொண்டு வருகிறது. ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யும் வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ரெமோ உட்பட பல படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டன. வசூலுக்கு எந்த சேதாரமும் இல்லை என்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் வியாழக்கிழமைகளில் வரத்தொடங்கிவிட்டன.
ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி முதலானோர் நடிக்க எம்.ராஜேஷ் இயக்கத்தில், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரித்துள்ள படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. இப்படத்தை இம்மாதம் 11-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்தனர். கூடுதல் வசூலுக்காக சமீபகாலமாக சில படங்கள் வெள்ளிக் கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாக, அதாவது வியாழக் கிழமைகளில் வெளியாவதை கருத்தில் கொண்டு 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தையும் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
தணிக்கை குழுவினரின் பார்வைக்கு சென்ற 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்கு சென்சார் குழுவினரின் க்ளீன் 'யு' சர்டிஃபிக்கேட் வழங்கப்பட்டிருப்பது, 'கடவுள் இருக்கான் குமாரு' படக்குழுவினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதே நேரம் படத்துக்கு தடை கோரி விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது தயாரிப்பாளரை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
0 comments:
Post a Comment