Tuesday, January 31, 2017


2.ஓ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய எமி ஜாக்சன்



01 பிப்,2017 - 10:34 IST






எழுத்தின் அளவு:








மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த அக்மார்க் ஆங்கிலேயே பொண்ணு. மதராச பட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடித்தார். ஒரு படத்துடன் லண்டன் திரும்பலாம் என்று வந்தவருக்கு அடுத்து வந்தது இந்திப் பட வாய்ப்பு. மீண்டும் தாண்டவம் படத்தின் மூலம் தமிழ் நாட்டுக்கு வந்தார். ஐ படத்தில் ஷங்கர் எமியை தமிழ் பெண்ணாக மாற்றிவிட இங்கேயே செட்டிலாகிவிட்டார். இப்போது தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். சென்னை புறநகரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எமி ஜாக்சன் தனது 25வது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். கேக் வெட்டி இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுக்கு ஊட்டி மகிழ்ந்தார். ஷங்கர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.

பிறந்த நாள் குறித்து எமி ஜாக்சன் கூறியிருப்பதாவது: இந்தியாவில் எனது முதல் பிறந்த நாளை ஆர்யா, விஜய், நீரவ்ஷாவுடன் கொண்டாடினேன். ஷங்கர் சாருடன் கொண்டாடுவது இது 3வது பிறந்த நாள். ஐ படப்பிடிப்பின் போது முதல் பிறந்த நாள் 2.ஓ படத்தின் போது இரண்டு பிறந்த நாள். நான் லண்டன் பெண்ணாக இருந்தாலும் என்னை தன் குடும்பத்தில் ஒருத்தியாக எல்லோரும் ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது ஒவ்வொரு பிறந்த நாளையும் இந்தியாவில் கொண்டாடவே விரும்புகிறேன்" என்கிறார் எமி.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர்-ஒன் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சினிமா பாடல்களுக்கேற்ப நடன கலைஞர்கள் நடனமாட, அதற்கு சில நீதிபதிகள் மதிப்பெண் வழங்குவது போன்று நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர், இளைஞிகளே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஆனால், விரைவில் ...

தாத்தா வேடத்தில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி!



01 பிப்,2017 - 08:56 IST






எழுத்தின் அளவு:








தமிழில் மிஷ்கின் இயக்கிய ஹாரர் படம் பிசாசு. பேய் படம் என்றாலும் அதை அப்பா மகள் செண்டிமென்ட் கதையில் இயக்கியிருந்தார் அவர். அந்த படத்தின் கன்னட ரீமேக்கான ரக்சாஷியில் நடிகர் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி தமிழில் ராதாரவி நடித்த கேரக்டரில் நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அப்பாவின் நடிப்பை நேரில் சென்று பார்த்து ரசித்தார் விஷால்.

அதையடுத்து இப்போது ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் நேத்ரா என்ற படத்திலும் நடிக்கிறார் ஜி.கே.ரெட்டி. பிசாசு கன்னட ரீமேக்கில் அப்பா வேடத்தில் நடித்த அவர், இந்த நேத்ரா படத்தில் கதாநாயகியின் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார். அதற்காக தலையில் வெள்ளை நிற விக் அணிந்து நடித்து வரும் அவர், தாத்தா-பேத்தி சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் காட்சிகளில் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து யூனிட்டிடம் கைதட்டல் பெற்று வருகிறாராம்.


தனுஷை வைத்து மீம்ஸ் போடுவது என்றால் நெட்டிசன்கள் குஷியாகிவிடுகிறார்கள்.


கோலிவுட்டில் போய் தனுஷ் பெயரை சொன்னால் கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுப்பார் என்பார்கள். ஆனால் நெட்டிசன்களோ தனுஷ் புகைப்படத்தை பார்த்தாலே குஷியாகிவிடுகிறார்கள். எல்லாம் மீம்ஸ் போடத் தான்.



அவரை வச்சு செய்வது என்றால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.ஊர் உலகில் எந்த ஜோடி பிரிந்தாலும் உடனே தனுஷை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.
இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் தனுஷ் மீம்ஸ்கள் தீயாக பரவுகின்றன.தன்னை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வருவது தனுஷுக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை. இருப்பினும் அமைதியாக உள்ளார். பாவம்யா அந்த மனுஷன் விட்டுடுங்க.


மீம்ஸ் கிரியேட்டர்கள் தனுஷுக்கு வைத்திருக்கும் பெயர் மகா பிரபு. அவருக்கே அவருக்காக வைத்திருக்கும் வாசகம், மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா என்பது தான்.ரஜினிகாந்த் தன்னை கிண்டல் செய்து மீம்ஸ் வருவதை கண்டுகொள்ளாமல் உள்ளார். மீம்ஸ் விஷயத்தில் மாமனார் வழியே தன் வழி என்று உள்ளார் தனுஷ்.





Lyricist Vairamuthu Snehanஎஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு. மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் சத்ரியன்.


யுவன் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படத்தின் பாடல் ஆசிரியர் சினேகன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

தமிழ் சினிமாவில் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். கிட்டதட்ட எல்லாருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார் வைரமுத்து.

ஆனால் என்னுடன் அவர் இதுவரை இணைந்து பணிபுரியவில்லை. அதை அவரே தவிர்த்து வருகிறாரா? தெரியவில்லை.

அவர் எனக்கு ஒரு வகையில் எதிரியாக தென்பட்டாலும், அவர்தான் எனக்கு ஆசான்.” என்று பரபரப்பாக பேசினார் சினேகன்.

Vairamuthu is my Guru also he is my enemy says Lyricist Snehan


kamal rajiniதமிழ் சினிமா உலகில் கிட்டதட்ட 35 வருடங்களாக நடிகராக பணியாற்றி வருபவர் டிங்கு.


தனது இரண்டு வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர் கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடனும் நடித்துள்ளார்.
அண்மைகாலமாக சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

இவரும் இவரது நண்பர் ராபர்ட்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர்.

ஹரிஹர மகாதேவி என்ற படத்திற்கு பஜன ப்ப்பா பஜன ப்ப்பா என்ற பாடலுக்கு வரிகள் எழுதியள்ளனர்.

அந்த படத்திற்கு அமிரிஷ் என்பவரை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளனர்.

ஆனால் சில காரணங்களாக அப்படம் தொடங்கப்படாமல் இருக்கவே, லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இசையமைக்கும் பணியை தொடர்ந்துள்ளார் அம்ரிஷ்.

அப்போது டிங்கு எழுதிய வரிகளையும் அந்த டியூனையும் இவர்களின் அனுமதியில்லாமல் லாரன்ஸ் படத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

மேலும் மற்றொரு பாடலை பரத் நடித்த பொட்டு என்ற படத்திற்கு அம்ரிஷ் கொடுத்து விட்டார் எனவும் டிங்கு தெரிவித்துள்ளார்.

Acor Tinku Cheated by Music Director Amresh

டிங்குவின் அந்த கண்ணீர் பேட்டி வீடியோ பதிவு இதோ….




தேவைப்பட்டால் அரசியலுக்கு வரத் தயார் - லாரன்ஸ் அதிரடி



31 ஜன,2017 - 21:47 IST






எழுத்தின் அளவு:








நடிகர் ராகவா லாரன்சின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாம் அரசியலுக்கு அவர் அச்சாரம் போடுவது போன்று இருப்பதாக செய்தி வௌியிட்டிருந்தோம், தற்போது அது உண்மையாகிவிட்டது, ஆம் தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் லாரன்ஸ் முழுக்க முழுக்க ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததோடு, களத்தில் இறங்கி போராடியும் வந்தார். போராட்டம் கடைசிநாளில் வன்முறையாக மாறியபோது கூட தொடர்ந்து மாணவர்கள் பக்கம் ஆதரவாக செயல்பட்டு வந்தார். பின்னர் முதல்வரை சந்தித்து போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

போராட்டம் முடிந்தபின்னரும் கூட போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் லாரன்ஸ்க்கு துணையாக இருந்து வந்தார்கள். இந்நிலையில் லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்...

ரூ.10 லட்சம் நிதியுதவி : ஜல்லிக்கட்டு என்ற விஷயத்திற்காக மெரினாவில் தெரியாத பல முகங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தோம், அதில் வெற்றி கிடைத்தது. ஆனால் அதை கொண்டாட முடியவில்லை. அடுத்தாக நாம் என்ன செய்யலாம் என்று இந்த இளைஞர்களுடன் எல்லாம் கலந்து பேசினேன். ஆனால் இது வௌியில் வேறு மாதிரி பேசப்படுகிறது. அதை தௌிவுப்படுத்தவே இந்த பிரஸ்மீட். இந்த போராட்டத்தில் மணிகண்டன் என்பர் கடல் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். அந்த செய்தியை கேட்டு அவரைப்பற்றி விசாரித்தோம். அம்பத்தூரில் அவரது வீடு இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். அங்கு போனதும் ஒருமாதிரி ஆகிவிட்டது. அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி, மீனவ குடும்பத்திற்காக ரூ.10 லட்சம் உதவி செய்வேன் என்று சொல்லியிருந்தேன், ஆனால் இப்போது அரசாங்காமே உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த தொகையை அந்த பையனுக்கு வழங்கினேன். அவரின் இழப்பை ஈடுகட்ட முடியாது. தமிழ் மண்ணுக்காக அந்த பையன் இறந்துள்ளார்.

முதல்வரிடம் கோரிக்கை : முதல்வரிடம் போராட்டம் தொடர்பாக கைது செய்ப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதற்கு தமன் இசையமைத்து பாடலை பதிவு செய்து கொடுத்தார் என்றார்.

அரசியலில் களம் இறங்குவோம் : தொடர்ந்து லாரன்ஸ் பேசும்போது, முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு நல்ல விஷயத்திற்காகவே கொண்டு செல்கிறோம். ஒருவேளை ஒரு விஷயத்திற்காக நாங்கள் போராடி அதில் பலன் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நாங்கள் அரசியலுக்கு வருவோம். எங்கள் இளைஞர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நாங்கள் களம் இறங்குவோம். நாங்கள் வரவேண்டுமா இல்லையா என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள்.

எந்த கட்சியையும் சேராதவர்களாக இருக்கணும் : எங்களுடன் இருப்பவர்கள் எந்த கட்சியையும், இயக்கத்தையும், தீவிரவாத அமைப்பையும் சேராதவன்(இருக்காது) என்று எழுதி கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் நேரத்தில் பணம் வாங்க மாட்டேன் என்று எழுதி கொடுக்க சொன்னேன். அனைவருக்கும் உதவி மட்டுமே செய்வோம் என்றேன், அனைவரும் மகிழ்ச்சியுடன் சரி என்று ஏற்று கொண்டார்கள்.

கொண்டாட்டம் : ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்றி கிடைத்திருப்பதால் அதை கொண்டாட அனுமதி கேட்டிருக்கிறோம், கிடைத்தவுடன் அதை விமரிசையாக கொண்டாட உள்ளோம்.

மனைவியின் நகையை அடகு வைத்தேன் : போராட்டாக்காரர்களுக்கு உதவுவதற்காக நான் என் மனைவி, அம்மாவின் நகையை அடகு வைத்து உதவி செய்திருக்கேன் என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.



ஓவியங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டும் மம்முட்டி மகள்..!



31 ஜன,2017 - 16:14 IST






எழுத்தின் அளவு:








எப்போதும் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், சில சமயங்களில் எப்போதாவது மம்முட்டியின் மனைவி சுல்பாத் என இவர்கள் மூவரை பற்றியே செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனவே தவிர மம்முட்டியின் மகள் சுருமி பெரும்பாலும் மீடியா வெளிச்சத்திற்குள் வந்ததே இல்லை.. வர விரும்புவதும் இல்லை.. ஆனால் மம்முட்டியைப்போலவே உதவும் குணம் கொண்ட சுருமி இப்போது திடீரென மீடியாவின் பார்வைக்கு ஆளாகி இருக்கிறார்.. அதுவும் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு உதவி செய்ய முன்வந்த காரணத்தினால் தான்..

சுருமிக்கு கடந்த 2004ஆம் ஆண்டே திருமணம் நடைபெற்றது... சுருமியின் கணவர் ஒரு டாக்டர்.. சுருமிக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரையும் திறமை இயற்கையாகவே கைவந்த கலையாக இருந்தது அதை ஊக்குவிக்கும் விதமாக தான் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கிருந்து ஓவியம் வரைவதற்கு தேவையான சாதனங்களை வாங்கிவந்து மகளுக்கு கொடுப்பாராம் மம்முட்டி. அதன் விளைவாக பள்ளிகளிலும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிவந்தார் சுருமி..


அந்த ஓவிய திறமைதான் அவருக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இடமும் வாங்கி தந்தது.. பின் லண்டனுக்கு சென்று ஓவியத்தில் மேல்படிப்பும் படித்துவந்தார் சுருமி. திருமணமான பின் தனது தந்தை, கணவர் ஆகியோரை பங்குதாரராக கொண்டு 'வாஸ்' என்கிற என்கிற அமைப்பை உருவாக்கி சமூக சேவைகளை செய்து வருகிறார்.. இதுவரை தான் வரைந்த ஓவியங்களை எல்லாம் இந்த அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற இருக்கும் ஓவியக்கண்காட்சிகளில் விற்று அதன்மூலம் கிடைக்கும் தொகையை மருத்துவ சிகிச்சை பெற வசதியில்லாத நோயாளிகளுக்கு உதவும் விதமாக வழங்க இருக்கிறாராம் சுருமி.
பாலிவுட்டில் பிஸி நடிகராக வலம் வரும் அக்ஷ்ய் குமார், தற்போது ஜாலி எல்எல்பி 2 படத்தை முடித்துவிட்டு, ரிலீஸ்க்கான புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று வருகிறார். சமீபத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிக்கும் படத்தை சல்மானும், கரண் ஜோகரும் இணைந்து தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதுப்பற்றி நடிகர் அக்ஷ்ய் குமாரிடம் கேட்டபோது, ...
நிவின் பாலி தமிழில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்காமல் இருந்தார்கள். தற்போது ரிச்சி என்று வைத்திருக்கிறார்கள். கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நிவின் பாலியுடன், நட்ராஜ், பிரகாஷ்ராஜ், ராஜ்பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். யு டேர்ன் புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயின், லட்சுமிப்ரியா செகண்ட் ஹீரோயின். இதன் ...

ஜெய்ப்பூரை காலி செய்த பத்மாவதி படக்குழு



31 ஜன,2017 - 12:59 IST






எழுத்தின் அளவு:








பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி எனும் வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன்படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அருகே நடந்து வந்தது. இரு தினங்களுக்கு முன்னர் கர்னி ராஜ்புட் என்ற அமைப்பு, பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருப்பதாக கூறி படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து அங்கிருந்த செட்டுகளை நாசம் செய்ததுடன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் கடுமையாக தாக்கியது. இதற்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய்ப்பூரில் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, பத்மாவதி படக்குழுவினர் அங்கிருந்து மொத்தமாக காலி செய்துவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் வேறு ஒரு தளத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, இயக்குநர் மற்றும் பத்மாவதி படப்பிடிப்பில் அத்துமீறி தாக்குதல் நடத்திய கர்னி அமைப்பு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பத்மாவதி படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார்.



கேரள திரைப்பட விழாவிற்கு செல்லும் 'மேற்குத் தொடர்ச்சி மலை'



31 ஜன,2017 - 15:48 IST






எழுத்தின் அளவு:








2010 ஆம் ஆண்டில் சீனுராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் ஹீரோவான விஜய்சேதுபதி, மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாகிவிட்டார். கொஞ்சம் வளர்ந்ததும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' என்ற படக் கம்பெனியையும் துவக்கிய விஜய்சேதுபதி 'மேற்குத் தொடர்ச்சி மலை' என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

என்ன காரணத்தினாலோ மேற்குத் தொடர்ச்சி மலை படம் ஒரு கட்டத்தில் ட்ராப்பானது. அதன்பிறகு தன்னுடைய 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் 2வது படைப்பாக 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தினால் விஜய்சேதுபதிக்கு சில கோடிகள் நஷ்டமானது.

இந்நிலையில் ஏற்கனவே கிடப்பில் போடப்பட்ட 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை தூசுதட்டி எடுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கினார். லெனின் பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் ஏற்கெனவே கேரள சர்வதேச திரைப்பட விழாவிலும், பஞ்சாபில் நடைபெற்ற பிரோஸ்கோப் குளோபல் ஃபிலிம் பெஸ்டிவலிலும் கலந்து கொண்டு பாராட்டுக்களைக் குவித்தது.

தற்போது, மேலும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கு இப்படம் தேர்வாகியுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூரில் வரும் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 'அறிமுக படம்' என்ற பிரிவில் திரையிடப்படுவதற்கு 'மேற்குத் தொடர்ச்சி மலை' படம் தேர்வாகியுள்ளது. இதுபோன்ற பட விழாக்களில் கிடைக்கும் பெருமையை வைத்து 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை வியாபாரம் செய்துவிடலாம் என்று நம்புகிறாராம் விஜய்சேதுபதி.



ஸ்ரத்தா கபூருடன் நடிக்க ஆசைப்படும் ‛பிக்பாஸ் 10' சாம்பியன்



31 ஜன,2017 - 14:58 IST






எழுத்தின் அளவு:








சல்மான் கான் நடத்தும் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸின் 10வது சீசனின் சாம்பியன் பட்டம் வென்றவர் மன்வீர் சிங் குர்ஜார். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர், இப்போது டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது வருங்கால கனவு பற்றி பேசியிருக்கிறார். அதில் தனக்கு ஸ்ரத்தா கபூருடன் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛நமது நாட்டு மக்கள் கொடுத்த வரவேற்பால் எனக்கு புகழ் கிடைத்தது. வருங்காலத்தில் நிறைய ஹிந்தி படங்களில் நடிக்கும் ஆசை இருக்கிறது. குறிப்பாக எனது முதல்படத்தில் நடிகை ஸ்ரத்தாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.


singer krishபிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.


விரைவில் வெளிவரவிருக்கும் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார்.


அப்போது வழக்கம்போல், விஜய், அஜித், சூர்யா பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என ரசிகர்கள் கேட்டனர்.


அதற்கு அவர் கூறியதாவது…


  • அஜித் என்றால் அன்பு

  • விஜய் என்றால் மாணிக்கம்

  • சூர்யா என்றால் டார்லிங்

என்று ஒரே சொல்லில் பதிலளித்தார்.


Singer Krish about Vijay Ajith Suriya


"எனக்கு வாய்த்த அடிமைகள்" - நட்பை குறிக்கும் தலைப்பு



31 ஜன,2017 - 12:35 IST






எழுத்தின் அளவு:








சேதுபதி படத்தை தயாரித்த வாசன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்துள்ள படம் எனக்கு வாய்த்த அடிமைகள். நந்தா பெரியசாமியின் உதவியாளர் மகேந்திரன் ராஜாமணி இயக்கியுள்ளார். ஜெய், பிரணிதா, காளி வெங்கட், ‛நான் கடவுள்' ராஜேந்திரன், கருணாகரன், தம்பி ராமய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 2ந் தேதி வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி அளித்துள்ள பேட்டி வருமாறு:

அளவுக்கு மீறிய அன்பை செலுத்துபவர்களை அடிமை என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அதுபோல ஹீரோ மீது அதிக அக்கறையும், அன்பும் வைத்திருப்பவர்களை குறிப்பிடும் வகையில் எனக்கு வாய்த்த அடிமைகள் என்று ஹீரோவின் பார்வையில் தலைப்பு வைத்திருக்கிறோம்.

ஹீரோ ஜெய் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். அவருடன் வேலை செய்யும் ப்ரணிதாவை காதலிக்கிறார். அந்த காதலில் ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சனையால் நொந்து போகும் ஜெய், நண்பர்களை எப்படி டார்ச்சர் செய்கிறார் என்பதும், அந்த டார்ச்சர்களை தாங்கிக் கொண்டு நண்பர்கள் எப்படி காதலை ஒன்று சேர்க்கிறார்கள் என்பதும்தான் கதை.

காதல், ஊடல் படம் என்றால் ஜெய்க்கு கச்சிதமாக பொருந்தும். கதையை கேட்டு அவர் ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். "என்னை மனசுல வச்சி கதை எழுதினீங்களா?" என்றுகூட கேட்டார். ஹீரோயின் கேரக்டருக்கு கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் இருக்கிறது. இதனால் பலர் நடிக்க தயங்கிய கேரக்டரில் பிரணிதா தைரியமாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இன்னும் கவனிக்கப்படாத நடிகை. அவருக்கு இந்தப் படம் நல்ல திருப்பம் தரும்.

இது காமெடி படம்தான் ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட காமெடியோ மற்றவர்களை நக்கல் நையாண்டி செய்தோ, அடிவாங்கியோ, அடித்தோ காமெடி செய்யவில்லை. இயல்பான யதார்த்தமான காமெடியாக இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த காமெடி காட்சியும் அமைக்கப்படவில்லை. கதை சீரியசாக போகும், ரசிகர்களும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு திரைக்கதை. என்கிறார் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி.