Friday, January 20, 2017

ஜன.30ல் துவங்கும் ராம் சரணின் அடுத்த படம்


ஜன.30ல் துவங்கும் ராம் சரணின் அடுத்த படம்



20 ஜன,2017 - 14:56 IST






எழுத்தின் அளவு:








துருவா படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். மைதிரி மூவீஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 30ல் துவங்கும் என கூறப்படுகின்றது. தனது தந்தை சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தை தயாரித்துக் கொண்டே துருவா படத்தில் நடித்ததுபோல், சிரஞ்சீவியின் 151வது படத்தை தயாரிக்கவுள்ள ராம் சரண் அப்படத்துடன் சுகுமார் படத்தில் நாயகனாகவும் நடிக்கின்றாராம். படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்து வரும் இயக்குனர் சுகுமார் கூடவே தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் ஈடுபட்டுள்ளார்.


0 comments:

Post a Comment