Friday, January 20, 2017

பீட்டா ஆதரவாளர்: மாதவன் படத்திற்கு சிக்கல்.?


பீட்டா ஆதரவாளர்: மாதவன் படத்திற்கு சிக்கல்.?



20 ஜன,2017 - 16:59 IST






எழுத்தின் அளவு:








'பிரேமம்' என்ற ஒரேஒரு மலையாள படத்தின் மூலம் அதிகபட்ச புகழைப்பெற்றவர் சாய் பல்லவி. அந்த படத்தை தொடர்ந்து 'கலி' என்ற மலையாள படத்தில் நடித்தார் சாய் பல்லவி. 'பிரேமம்' படம் வெளியானதுமே கோடம்பாக்கத்திருந்து பல அழைப்புகள் போனது சாய்பல்லவிக்கு. கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தின் கதாநாயகியாக நடிக்கவும் சாய்பல்லவிக்கு அழைப்பு வந்தது.

ஜார்ஜியாவில் மருத்துவம் படிப்பதை காரணம் காட்டி வந்த படங்களை எல்லாம் நிராகரித்தார். இந்நிலையில் இப்போது 'ஃபிதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மணிரத்னம் போன்ற மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கே சாய் பல்லவி அநியாயத்துக்கு பந்தா பண்ணுகிறார் என்ற தகவல் பரவியதை அடுத்து இதுவரை எந்த படத்திலும் சாய் பல்லவியை யாரும் கமிட் பண்ணாமலே இருந்தனர்.

இந்நிலையில் தமிழில் மாதவனுடன் ஒரு படத்தில் நடிக்க சாய் பல்லவியை கமிட் பண்ணியுள்ளனர். துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சார்லி' படத்தில் தான் நடிக்கிறார் சாய்பல்லவி.. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்து இயக்குபவர் ஏ.எல்.விஜய். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். பீட்டாவின் முக்கிய ஆதரவாளர்களில் மாதவனும் ஒருவர். பீட்டாவை தடை செய் என்ற கோஷம் வலுத்து வரும் இந்த நேரத்தில் மாதவனை வைத்து படம் எடுப்பது பெரிய துணிச்சல் என்றாலும் இவர் படம் வெளியாகும் போது நிச்சயம் சிக்கல் உருவாகும் என்ற பயமும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


0 comments:

Post a Comment