ஆப்ரிக்கா உள்ளிட்ட 55 நாடுகளில் வெளியாகும் பைரவா
09 ஜன,2017 - 10:54 IST
விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 12ந் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமத்தை ஏ அண்ட் பி குரூப் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பைரவா படத்தை 55 நாடுகளில் வெளியிடுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது...
ஏ அண்ட் பி நிறுவனம் 2017ம் ஆண்டை பைரவா வெளியீட்டுடன் துவக்குகிறது. உலக மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பைரவா படத்தை 55 நாடுகளில் வெளியிடுகிறோம். குறிப்பாக முதன் முறையாக ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, தான்சான்யா, போட்ஸ்வனா, காங்கோ ஆகிய நாடுகளில் வெளியிடுகிறோம் மற்றும் முதன் முறையாக உக்ரைன், அல்பீரியா, மெக்சிகோ, லுதுன்யா, லாட்வியா, போலந்து, எத்தியோப்பியா, ரஷியாவிலும் வெளியிடுகிறோம். மொத்தம் 55 நாடுகளில் படத்தை வெளியிடுகிறோம். இது தமிழ் சினிமா வர்தகத்தில் ஒரு சரித்திர சாதனையாகும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment