Sunday, January 8, 2017

என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை



என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை








நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தனது கணவர் சுந்தர் சி.யை புகழ்ந்துள்ளார்.
அரசியலில் மிகவும் பிசியாக இருக்கும் குஷ்பு சன் டிவியில் நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் அவர் 9 ஆண்டுகள் கழித்து தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
நடிப்பு, அரசியல் என்று இருக்கும் குஷ்பு அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.




இந்நிலையில் குஷ்பு இரவு 12.39 மணிக்கு ட்விட்டரில் கணவர் சுந்தர் சி. பற்றி கூறியிருப்பதாவது,என் நிஜ வாழ்க்கை ஹீரோ…என் சிறந்த நண்பர்… நாங்கள் இரு துருவங்கள் என்றாலும் என் ஆத்ம துணை… அவர் என்னவராக இருப்பதால் தான் நான் தெம்பாக இருக்கிறேன்..என் இனிய கணவர்… என தெரிவித்துள்ளார்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment