Wednesday, January 18, 2017

வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு புரட்சி… வாயே திறக்காத அஜித்


ajithஅரசியல் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமல் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து, ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.


சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கிற அளவுக்கு வரலாறாக அமைந்துள்ளது.

இதற்கு ஜிவி. பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி, லாரன்ஸ், மயில்சாமி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் அறிக்கை வாயிலாகவும் வீடியோ பதிவாகவும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது குறித்து எந்தவொரு அறிவிப்பையோ ஆதரவையோ முன்னணி நடிகரான அஜித் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Whether Ajith will break his Silence in Youth’s Jallikattu Protest

0 comments:

Post a Comment