ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தொடங்கும் முன்பே டக்கரு டக்கரு என்ற ஜல்லிக்கட்டு பாடலை பாடி ஆதரவு அளித்தவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
மேலும் இது தொடர்பான நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.
ஆனால் சென்னை மெரினா பீச் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையில் இப்போராட்டம் மோடி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை பற்றி தனி மனித தாக்குதலை நடத்துகிறது.
மேலும் தமிழ்நாடு தனி நாடு, தேசிய கொடி அவமதிப்பு போன்றவற்றை முன்னிறுத்துகிறது.
இதில் எனக்கு உடன்பாடில்லை. போராட்டம் பாதை மாறி செல்வதில் நான் விரும்பவில்லை.
தற்போது அவசர சட்டம் வந்து விட்டது.
இனி தற்போது போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.
இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்களின் போராட்டம்.
இதில் என்னுடைய பங்கு மிகக்குறைவு தான்.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்/
என் போட்டோவை பயன்படுத்தி அரசியலை இணைக்கின்றனர்.
எனக்கு அதற்கான அனுபவம் இல்லை” என்று வீடியோ பதிவை தன் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment