Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் நடையை கட்டிய முதல்வர்


o paneer selvamஜல்லிக்கட்டு தொடர்பான நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தால் தமிழக அவசர சட்டம் பிறப்பித்தது.


ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் என பொதுமக்களும் இளைஞர்களுடன் இணைந்து போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அங்குள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பின்னர் நத்தம் தொகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி அங்கு ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனாலும் அங்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் சென்னை திரும்பி விட்டார்.

இவை ஒருபுறம் இருக்க புதுக்கோட்டையில் அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

ஆனால் அங்கு ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர்கள் விளையாட்டின் போது மரணம் அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment