அப்பாவாக நடிப்பதை உறுதி செய்தார் சல்மான்
03 ஜன,2017 - 11:57 IST
‛சுல்தான்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சல்மான் கான், தற்போது ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர் கானே இப்படத்தையும் இயக்குகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டியூப்லைட்டில் சல்மான், ஒரு பெண் பிள்ளைக்கு அப்பாவாக நடிக்கப்போவதாக செய்தி வெளியானது. இப்போது அதை சல்மானும் உறுதி செய்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது டியூப்லைட் படம் பற்றி பேசினார். அவர் கூறுகையில், ‛‛இந்தப்படத்தில் நான் 13வயது பெண் பிள்ளைக்கு அப்பாவாக நடிக்கிறேன். நடனத்தை பற்றி டியூப்லைட் படம் பேசப்போகிறது. குறிப்பாக அப்பா - மகள் இடையேயான உறவை சொல்லும் படமாக இருக்கும். நான் பயிற்சி பெற்ற ஒரு நடனக்காரராக நடிக்கிறேன். ஹாலிவுட்டில் வெளியான ‛செட்அப்' பட பாணியிலான கதை இது. நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்'' என்றார். டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment