Tuesday, January 3, 2017

காமெடியை குறைத்து நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க சந்தானம் முடிவு


காமெடியை குறைத்து நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க சந்தானம் முடிவு



03 ஜன,2017 - 12:30 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக இருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளார். சந்தானத்தின் முதல் மூன்று படங்களான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு என அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் காமெடி படங்கள் தான். அதனைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களும் காமெடி படங்களே.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி' சந்தானம் நடிக்கும் வழக்கமான காமெடி படம் இல்லை. செல்வராகவன் ஸ்டைலில் உருவாகும் காதல் படங்களைப்போன்ற படமாம். இந்தப் படத்தை அடுத்து சந்தானம் நடிக்க திட்டமிட்டுள்ள படங்களும் அவர் மீதுள்ள காமெடி இமேஜை மாற்றும் படங்கள்தானாம். இனி தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்காமல் தேர்ந்தெடுத்த நல்ல கதையுள்ள வித்தியாசமான கதைகளில் நடிக்க சந்தானம் முடிவெடுத்திருக்கிறாராம்.


0 comments:

Post a Comment