நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனார் தீபக்
03 ஜன,2017 - 12:43 IST
சின்னத்திரை தொகுப்பாளர் தீபக், இப்போது சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். நடிகராக, தொகுப்பாளராக வெற்றிகரகமாக வலம் வந்து கொண்டிருந்தபோதே சினிமாவுக்குச் சென்றார். இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றும் தீபக்கிற்கு அடுத்த படம் வாய்ப்பு அத்தனை எளிதில் கிட்டவில்லை. இதனால் மீண்டும் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு திரும்பினார். தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.
இதற்கிடையில் என் ஆட்டோகிராப் என்ற நிகழ்ச்சியின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சின்னத்திரை தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர், சின்னத்திரை, பெரிய திரை நடிகர், சின்னத்திரை தயாரிப்பாளர் என பன்முகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் தீபக். விரைவில் அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்பும் வரவிருக்கிறது.
"என்னை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம்மை துரத்திக் கொண்டுவந்து சேரும். எங்கே தேங்கி நிற்கிறோமோ அங்குதான் தோல்வி வந்து நம்மை ஒட்டிக் கொள்ளும். நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கிற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறேன். பலன் இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் தீபக்.
0 comments:
Post a Comment