ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனைகள் படமாக உருவாகவுள்ளது.
மாரியப்பன் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயக்குகிறார்.
இப்படம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் மாரியப்பன் கூறியுள்ளதாவது…
‘என்னை போல் கிராமத்தில் உள்ள திறமையான இளைஞர்கள் இப்படத்தை பார்த்து, ஊக்குவிக்கப்பட்டு பதக்கம் பெற்றால் அதுதான் எனக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி.
என்னுடைய கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.
அதை டைரக்டர் முடிவு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் வசனம் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment