Monday, January 16, 2017

சரோஜா தேவியை தள்ளிவிட்ட எம்ஜிஆர்.,


சரோஜா தேவியை தள்ளிவிட்ட எம்ஜிஆர்.,



16 ஜன,2017 - 18:45 IST






எழுத்தின் அளவு:








ஏவிஎம்., நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படமான வண்ணப்படம் "அன்பே வா" இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் ஒரு காட்சியில் நடிக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எம்.ஜி.ஆர்., திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சரோஜா தேவியை பலமாக தள்ளிவிட்டார். சரோஜா தேவியும் 4அடி தள்ளி போய் விழுந்தார். இப்படி ஒரு காட்சி படத்தில் கிடையாதே என்ன ஆச்சு எம் ஜி ஆருக்கு? என்று படக்குழுவினர் திகைத்து நின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் அறிய வகை இரண்டு தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் படமெடுத்து நிற்பதை பார்த்த எம்.ஜி.ஆர் பாம்பு... பாம்பு என்று கத்தி பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல் வழக்கம்போல் தனக்கே உரிய சமயோஜித புத்கியோடு சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார். அதோடு ஷூ அணிந்த தனது கால்களால் அந்த பாம்பை எம் ஜி ஆர் மிதித்தே கொன்று விட்டார். அப்போதுதான் சுற்றி நின்ற படக்குழுவினருக்கு விஷயம் புரிந்தது. தனது உயிரை காப்பாற்றிய எம் ஜி ஆருக்கு நன்றி சொன்ன சரோஜா தேவி பதற்றமான சூழ்நிலையில் என்னை தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே தோன்றியது என்று கேட்டதற்கு எம்.ஜி.ஆர்., அளித்த பதில்... இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.


0 comments:

Post a Comment