Monday, January 16, 2017

சக நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.,


சக நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.,



16 ஜன,2017 - 18:48 IST






எழுத்தின் அளவு:








ஆர்எம் வீரப்பன் தயாரித்து சத்யா மூவிஸ் பேனரில் வெளிவந்த திரைப்படம் கண்ணன் என் காதலன்". படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார். ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டார். சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி என்ற இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம் ஜி ஆர் இறங்கிவிட்டார்.

அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன் அந்தப்பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது? என்று கூறி அவரும் அங்கேயே இருந்துவிட்டார். படியில் உருள்வது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்திற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர். ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர்., தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு பல முறை உறுதி செய்த பின்னர் தான் ஜெயலலிதா நடித்த அந்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.


0 comments:

Post a Comment