‛கருப்பன்' ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்
16 ஜன,2017 - 19:30 IST
2016-ம் ஆண்டில் பிஸி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் சேதுபதி, 2017-ம் ஆண்டிலும் அதே பிஸியோடு வலம் வருகிறார். தற்போது, அவர் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன்படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று 39வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை கருப்பன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். அதோடு படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் தனது செலவில் பிரியாணி விருந்து கொடுத்தார். விஜய்சேதுபதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட சேவைகளை செய்தனர். கேரளாவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளதால் அங்கும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடினர்.
0 comments:
Post a Comment