சஞ்சய் தத்தின் மகளாக அதிதி ராவ்
18 ஜன,2017 - 17:53 IST
பிரபல இயக்குநர் ஓமங் குமார் இக்கத்தில் சஞ்சய் தத் மீண்டும் நடிக்க இருக்கும் படம் ‛பூமி'. இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்கயிருக்கிறார். அப்பா - மகள் இடையேயான கதை தான் இந்த பூமி. படம் முழுக்க முழுக்க உத்தரப் பிரதேச மாநிலத்தில் படமாக்கப்பட இருக்கிறது. பூஷன் குமார் தயாரிக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தில் சஞ்சய் தத்தின் மகளாக நடிக்க ஆலியாபட்டை கேட்டனர், ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து சிவாய் படத்தின் சாயிஷா சைகல் நடிப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில் நடிகை அதிதி ராவ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதை இயக்குநர் ஓமங் குமாரே அறிவித்திருக்கிறார்.
இதைப்பற்றி ஓமங் குமார் கூறியதாவது... "அதிதி ராவ் இந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால் தான் அதிதி ராவை இப்படத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளோம். இப்படத்தில் பூமியாக அவர் நடிக்க வேண்டும் என்று நான் அசைப்படுகிறேன்" என்றார்.
‛பூமி' படம் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
0 comments:
Post a Comment